இலங்கை

தமிழ் பேசும் மக்களின்பல்வேறு தேவைகளுக்கும் சிறந்த கூட்டணி; 6 தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி

6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் ,

இந்தச் சந்திப்பில் முழுமையான அரசி யலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரு நல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக் கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங் கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண் டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த

பிரதிநிதிகள்ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். மாகாண சபைத் தேர் நல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் சுலந்துரையாடப்பட்டதுடன், மாகான பைத் தேர்தல்களை நடத்துவது தொடர் பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும்,

எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர் களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதா கவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப் பட்டதுடன், குறித்த பணியை அவசரமா சுச் செய்ய முடியாது எனவும், பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூ டிய சமூகப் பரிசீலனையாக அது குறித்துக் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட் டினார். இது 1948, 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுசுளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப் புகளைப் போன்று, ஒரு தரப்பினரால் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் அரசி யலமைப்பாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்தஜனா திபதி அநுர குமார திசாநாயக்க, அரசிய லமைப்பு திருத்தப்பட வேண்டும் என்ப துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஒழிக்கப்பட வேண்டும் என் பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார்.

எனினும், இந்த சந்தர்ப்பத்தில் அவசரமா கொண்டு வரப்படும் அரசியலமைப்புத்
திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந் த மொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான கருத்தாடலைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். பல்வேறு சமூகப் பிரிவி னரும் தமது தேவைகளுக்காக மாத்திரம் செயற்படு வதைத் தாண்டி, இலங்கையர் களாக ஒன்றிணைந்து செயற்படும் நாட்டை உருவாக்கும் அடித்தனம் தற்போதைய அரச ாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் நாட்டில் எந்தவொரு இனவாத மோதல் களும் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் முறையான ஆட்சி முறைமையே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

மலயக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு, தோட்டத் தொழி லாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத் தர்களுக்கு வதிவிடத்துக்காக 10 பேர்ச் காணிக்கான சட்டபூர்வ உரிமையை வழங் கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ் முற்போக் குக் கூட்டணியின் வி. ராதாகிருஷ்ணன், கம்பனிகளின் எதிர்ப்புக் காரணமாகத் தங்களது அரசாங்கங்களால் நிறை வேற்றிக் கொள்ள முடியாதிருந்த அந்தப் பணியா னது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிறை வேறும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

எந்தவொரு மக்களும் வசிக்காத மலை யகப் பிரதேசங்களில் கூட நில வெடிப்புகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியஜனா திபதி, அதற்கேற்ப மத்திய மலையகத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் வசையிலேயே அந்த சிக்கலுக்கான தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அதற்காகத் தற்போது தனி அதிகாரசபை யொன்று ஸ்தா பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தகைய நடவடிக்கைகளின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் எதிர் பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ் வேறு தேவைகளின் அடிப்படையில்
தோட்ட கம்பனிகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், 2042 ஆம் ஆண் டிற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்கள் புதுப் பிக்கப்பட்ட வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்படி, வெகு விரைவில் நிறுவனங்களுடன் புதிய ஒப் பந்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள மையால், மலையக மக்களுக்கு நிலத்திற் கான சட்டபூர்வ உரிமையை வழங்குவது தொடர்பான சரத்துகளை அதில் உள்வாங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட் டார். இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீட்டுரிமை கிடைத்த போதிலும், நீர் மற்றும் மின்சாரக் கட்ட ணங்களைச் செலுத்துவது உள்ளிட்ட வசதி களைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வ தாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

அந்த மக்களுக்கு பொருளாதார நிவா ரணம் வழங்குவதற்காக தொண்டமான் அமைப்பையும் நெவிடா அமைப்பையும் இணைத்து புதிய வேலைத்திட்டமொன் றைத் தயாரிப்பதற்கு ஏற்கன வே முன்மொ ழிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்ட மைப்பு வசதிகள் அமைச்சுக்காக இவ்வ குடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு களை விட அதிகமான தொகையினை 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்ஜனா திபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்
பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுர குமார திசா
நாயக்க, மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதே அரசாங் கத்தின் நிலைப்பாடு என்றும், ஆணைக் குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட அதற்கான பல சாதகமான நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், போரினால் வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத்
தீர்வாக, அந்த மக்களுக்கு இரண்டு கட்டங் களின் கீழ் 15,000 வீடு களை நிர்மாணிப்பதற் காக 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய் யப்படும் எனவும்ஜனாதிபதி தெரிவித்தார். டித்வா அனர்த்தம் காரணமாக வீடு களை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித் நுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலிக வீடு களை அமைத்துக் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகள் நிறைவடையும் வரை அந்த மக்க ளுக்கு வாடகை வீட்டுக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறை மற் றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் குறித்தும் இங்கு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், தொல் பொ ருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் பழைய கொள்கை சுளின் அடிப்படையில் செயற்படுவதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் முகங் கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினை கள் குறித்தும் பிரதிநிதிகள்ஜனாதிபதியை தெளிவுபடுத்தினர்.

இந்த அனைத்துக் கருத்துகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்க, தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடு வ நற்கு, இவ்வாறான ஒரு கூட்டணியை உரு வாக்குதல் தொடர்பில் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பொதுவாக மக்கள் பிரச்சி னைகள் குறித்தும் சுவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார் பில் அதன் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம். தாஹிர், என்.பி.எம்.எம். தாஹிர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்
கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முரு கேசு சந்திரகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம். ஏ. சுமந்திரன், பாரா ளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமா ணிக்கம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் நிசாம் கரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ் ணன் மற்றும் பரத் அருள்சாமி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button