இலங்கை

சிறைச்சாலை அதிகாரிகள் மோதலைத் தடுக்காது வெளியேறினார்களா?

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு அங்கு நிலவும் கடுமையான இடநெருக்கடியே காரணம் என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் இதன் உண்மையான பின்னணியை மறைக்க முயற்சிப்பதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறைச்சாலையில் 991 கைதிகளை மட்டுமே தடுத்து வைத்திருக்க முடியும் என்ற போதிலும், சம்பவம் நடக்கும் போது 4,447 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை இல்லை என்றும், இதனாலேயே அங்கு மோதல் நிலைமை ஏற்படும் என்றும் சேனக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மஹர சிறைச்சாலையில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பதற்றமான நிலை உருவாகியுள்ள போதும், அதைத் கட்டுப்படுத்தாமல் சிறைச்சாலை அதிகாரிகள் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், கைதிகளுக்கு இடையே மோதல் தீவிரமடைய வழிவகுத்ததாகவும், அங்கு கைதிகளை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button