இலங்கை

இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இரசியப் பேச்சு 5 முக்கிய புள்ளிகள் பங்கேற்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்த நிலையில்,கொழும்பு 07லில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு இரசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. டிரான் அலஸின் அலுவலகத்திலே இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

அதில் கம்மன்பில,விமல் வீரவன்ச,தயாசிறி ஜயசேகர மற்றும் மேலும் நான்கு அல்லது ஐந்து பேர் இருந்துள்ளனர். சிலர் வெளிச்சத்தில் தங்களின் முகம் தெரியாமல் இருக்க இருள் சூழ்ந்த பகுதியில் தங்களின் காரை நிறுத்தி இறங்கிச் சென்றுள்ளனர். அதனால் அவர்களைச் சரியாக அடையாளம் காண முடியாமலிருந்துள்ளது.

இவர்கள் எதற்காக இச்சந்திப்பை நடத்தினார்கள் என இன்னும் தெரியவரவில்லை. டிரான் அலஸ் என்பவர் எதற்கும் தயாரான பிரதான தரகர். அரசில் அல்லது எதிர்க்கட்சியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழும் ஒரு நபர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வந்ததும் இவை அனைத்தும் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக டிரான் அலஸ் என்பவர் நாட்டிற்குப் பல மில்லியன் டொலர்களை நட்டப்படுத்திய ஒரு பாரிய மோசடிக்காரர். பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களான கொஸ்கொட சுஜீ- கரந்தெனிய சுதா போன்றவர்களுடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தவர்.

டிரான் அலஸின் பத்திரிகை அலுவலகத்தில் இரவு இச்சந்திப்பு நடந்துள்ளது. 17 பேர் வரை அங்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டிரான் அலஸ் ஒரு நேரத்தில் ஜனாதிபதி அநுர திசாநாயக்கவுடன் இருக்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்சவுடன் இருக்கிறார். இது அரசியலை விட ஒரு மோசடி. ஏனெனில் அவருக்குத் தேவை இவர்கள் அனைவரையும் அருகில் வைத்துக் கொண்டு தனது காரியங்களைச் சாதிப்பதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button