உலகம்

மத்திய கிழக்கில் பதற்றம்; ஈரான் தாக்கினால் அணுமின் நிலையங்கள் அழிக்கப்படும்

ஹேர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் அணுமின் நிலையங்கள் அல்லது பாலங்கள் மீது அமெரிக்கா வெடிகுண்டு வீசி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் முறிந்ததையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்குப் பதிலடியாக ஹேர்முஸ் நீரிணையை மூடியுள்ள ஈரான், அதன் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இது குறித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், இனிவரும் காலங்களில் ஹேர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் ஏவுகணை, ட்ரோன் அல்லது வேறு எந்த ஆயுதங்களைக் கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தினால், தலைநகர் தெஹ்ரானில் அல்லது அதன் அருகில் உள்ள பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை அமெரிக்கா குண்டுவீசி அழிக்குமென தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button