இலங்கை

பிள்ளைகளின் படங்களை சுமந்து நீதி கேட்ட போராட்டக்காரர்கள்; குழப்பத்தை ஏற்படுத்திய பொலிஸார்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களைத் தாங்கியவாறு நீதி கேட்ட போராட்டகாரர்களுக்கு பொலிஸார் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

செம்மணி மனிதபுதைகுழியைப் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு  செம்மணிக்குச் சென்றது.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 8 மணிக்கு செம்மணி வளைவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளை ஏந்தியவாறு கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அந்த படங்கள் தாங்கிய பதாகைகளை ஊடகவியலாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் பதிவுசெய்யும்போது அதனை மறைக்கும் வகையில் பொலிஸார் குறுக்கே நின்றனர்.

இதன்போது அவற்றை மறைக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு கூறிய நிலையிலும் அவர்கள் அங்கிருந்து நகராமல் நின்றதால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களின் குரலையடுத்து பொலிஸார் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button