கன்னியா நிகழ்வு மதம் சார்ந்ததல்ல; தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர்

கன்னியாவில் (22) இடம்பெற்ற நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல இது இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றை பாதுகாக்கும் முயற்சியே என நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய திருகோணமலை மாவட்ட தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.யூ.சுரங்க பெரேரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
136 வது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு நேற்று (22) தொல்பொருள் அமைவிடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்குடன் நிகழ்வு கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் கட்டுமானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல. இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றை பாதுகாக்கும் முயற்சியே இது. இதற்கு சிலர் இன, மத சாயங்களை பூச நினைக்கின்றனர். அது அவ்வாறான ஒன்றல்ல. தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் 100 தொல்லியல் பகுதிகளை பாதுகாக்கும் திட்டத்தில் இன்னும் சில தினங்களில், சேருநுவர பிரதேச செயலகப்பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள, சோழர்காலத்தைச் சேர்ந்த ஸ்ரீP மங்களபுரம் சிவன் ஆலயத்தை பாதுகாக்கும் வகையிலான கட்டுமானம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே தொல்லியல் திணைக்களம் மத, இன வாத நோக்குடன் செயல்படுவதில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன் என்று கூறினார்.
![]()