ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை 37.5 பில்லியன் டொலர் செலவு!

ஈரானில் அமெரிக்கா நடத்திவரும் போருக்கான செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth ) செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்; History
மக்கள் மத்தியில் ஆதரவற்றதாகக் கருதப்படும் இந்தப் போருக்கான அவசர நிதியைப் பெறுவதற்காக, தீவிர குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிய பின்னர் முதன்முறையாக சந்தேகம் கொண்ட சட்டமியற்றுபவர்களை அவர் எதிர்கொண்டபோது இத்தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் தங்களது பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள பெரும் சவாலை எதிர்கொள்ளக்கூடிய இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளது.
இந்த நிலையில், மக்கள் விரும்பாத ஈரான் போரை குறைந்த விலையுடன் தொடர்புபடுத்த ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிப்பதால், தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பொதுக் கருத்துக் கணிப்புகளில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
வொஷிங்டனில் நடைபெற்ற விசாரணையின்போது, 37.5 பில்லியன் டொலர் தொகையானது போரின் சில அம்சங்களையும், செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான எதிர்பார்க்கப்படும் செலவுகளையும் உள்ளடக்கியது என்று ஹெக்ஸெத் சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்தார்.
எனினும், பென்டகன் இந்தத் தொகையை எவ்வாறு கணக்கிட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
போரின் முதல் ஆறு நாட்களுக்குக் குறைந்தது 11.3 பில்லியன் டொலர் செலவானதாக ட்ரம்ப் நிர்வாகம் மதிப்பிட்டிருந்ததாக கடந்த மார்ச் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது. Mathematics
ஈரான் தொடர்பான மோதலுக்கான செலவுகளே இதில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலையில், ஏறக்குறைய 90 பில்லியன் டொலர் கூடுதல் நிதியை வழங்குமாறு ட்ரம்ப் கடந்த மாதம் நாடாளுமன்றத்திடம் கோரினார்.
இது, போரினால் அதிருப்தியில் உள்ள மற்றும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மற்றொரு மோதலுக்கான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தப் போர், பென்டகனின் ஏறக்குறைய 1 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், இராணுவப் பணியாளர்கள் தொடர்பான விவகாரங்களுக்கான நிதியுதவிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டுவீசத் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் அல்லது தனது திட்டங்கள் குறித்து ட்ரம்ப்பும் அவரது குழுவினரும் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்புச் சட்டமியற்றுபவர்களும் குறை கூறியுள்ளனர்.
பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் அவைகளில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் மிகக் குறைந்த பெரும்பான்மையையே கொண்டுள்ளதால், நிதி ஒதுக்கீடு சட்டமூலங்கள் நிறைவேற வழக்கமாக ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு தேவைப்படுகிறது.
![]()