உலகம்

பேருந்துக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு பவுண்ட்ஸாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு !

இங்கிலாந்தில் பேருந்துக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு பவுண்ட்ஸாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என பிரதமர் அன்டி பே(ர்)னாம் (Andy Burnham) அறிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தற்போது, ​​நாடு தழுவிய அளவில் ஒருவழிப் பேருந்துக் கட்டணத்திற்கான உச்சவரம்பு, 2027ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை மூன்று பவுண்ட்ஸாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை போக்குவரத்து இணைப்புகள் அத்தியாவசியமானவை எனவும், அதிக விலை காரணமாக யாரும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மலிவான போக்குவரத்து சாத்தியமில்லை என்று மக்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார்கள். நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் இதை முன்பும் செய்திருக்கிறேன், தற்போது மீண்டும் செய்வேன் எனவும் எனவும் பிரதமர் அன்டி பே(ர்)னாம் (Andy Burnham) கூறியுள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோருக்கான பேருந்துக் கட்டணங்களுக்கு இரண்டு பவுண்ட்ஸ் உச்சவரம்பு நிர்ணயிப்பேன் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த கட்டணங்கள், மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல உதவுவதோடு, வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button