முச்சந்தி
சீமான் வன்னிக்குப் போன நேரம் ஆமைக் கறியே சாப்பிடவில்லையாம்.?

போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியச் சொல்லி அந்தக் காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இவர் சொல்கிறார், சீமான் வன்னிக்குப் போன நேரம் ஆமைக் கறியே சாப்பிடவில்லையாம்.
மிஸ்டர் சந்திரசேகரன், நீங்கள் எப்ப வன்னிக்குப் போனியள்?
சரி, அதை விடுவம்.
நான் 1983ஆம் ஆண்டில் இருந்து 1985வரை கிளிநொச்சியில் வளர்ந்தவன் என்ற வகையில் சொல்கிறேன், ஆமை இறைச்சி சாப்பிடுவது வன்னியில் வழமைக்கு மாறான ஒரு விசயமே இல்லை.
ஆனால் அதில் இருக்கிற சிக்கல் என்னவென்றால் பாருங்கோ, ஆமை இறைச்சி காய்ச்சின பாத்திரம் ஆறு மாதத்துக்கு நாற்றமெடுக்கும்.
அதாலை, அந்த பாத்திரத்தை வீட்டிற்குள் வைக்க மாட்டீனம்.
சரியோ, மிஸ்டர் சந்திரசேகர்?

அதை விட மிஸ்டர் சந்திரசேகர், இன்னொரு விசயம் என்னவென்றால் பாருங்கோ, கடலுக்குப் போகும் மீனவர்களின் வலையில் ஆமைக் குஞ்சுகள் சிக்கினால் காவல்துறைப் பொறுப்பாளராகவும், பிறகு அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் இருந்த நடேசன் அண்ணையிட்டை கொண்டு போய் குடுப்பீனம்.
அன்றைக்கு நடேசன் அண்ணையை சந்திக்கிற ஆகூழ் (luck) உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு ஆமை இறைச்சி தான் விருந்தாகப் பரிமாறப்படும்.
இப்ப சொல்லுங்கோ: சீமான் ஆமைக்கறி சாப்பிட்டவரா இல்லையா?
நான் சீமானின் அரசியலை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், அவருடைய தமிழ் மொழிப் பற்றையும், தமிழின உணர்வையும் மதிப்பவன்.
ஆகையால் பாருங்கோ மிஸ்டர் சந்திரசேகர், போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து சந்திரிகா அம்மையாருக்கு அந்த நாட்களில் பரிவட்டம் கட்டின உங்களை மாதிரியான ஆட்கள் எல்லாம் சீமானை விமர்சிக்கக் கூடாது.
முகநூல்
![]()