இலங்கை

திருமலையில் இரகசிய நகர்வு! பறிபோகும் மற்றுமொரு தமிழர் பாரம்பரிய சின்னம்

திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் (22.7.2026) புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையிலே, தமிழர்களின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த பகுதியிலே எந்தவிதமான கட்டுமானப்பணிகளும் செய்யக் கூடாது என திருகோணமலை நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தொால்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலே குறித்த இடத்திலே விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, இந்த நிகழ்விற்கு அரச அதிகாரிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக தமிழர்களின் பாரம்பரியம், மரபு சார்ந்த இடங்கள், வரலாறு சார்ந்த இடங்கள் கையகப்படுத்தும் நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்சியாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

எனவே இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button