உலகம்

மத்தியக்கிழக்கில் மோதல்கள் நிறைவுக்கு வர வாய்ப்பில்லை – அமெரிக்க உளவுத்துறை தகவல்

ஈரானின் பேச்சுவார்த்தை நிலையை மாற்றுவதற்கோ அல்லது நடந்து வரும் மோதலைத் தணிப்பதற்கோ வாய்ப்பில்லை என்று அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது.

ஈரான் தனது தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலைத் தாக்கியுள்ளது.

அதே நேரத்தில் அதன் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கடைசி நாள் வரை போராடுவோம் என்று சபதம் செய்துள்ளது. இந்நிலையிலேயே உளவுத்துறையின் தகவல் வந்துள்ளது.

இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக, கத்தார், எகிப்து, ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் பங்கேற்புடன், 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈரான் முன்மொழிந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button