பலதும் பத்தும்

மெஸ்சியைப் போல யமாலையும் கையாள்வது மிகவும் கடினமானது

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ள நிலையில், ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமைன் யமாலை (Lamine Yamal) எவ்வாறு தடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) மிகவும் நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், லமைன் யமால் கால்பந்து உலகிற்கு கிடைத்த ஒரு புதையல் என்றும், அவரைத் தடுக்க ஒரே வழி ஞாயிற்றுக்கிழமை போட்டி முடியும் வரை அவரை ஹோட்டல் அறையிலேயே பூட்டி வைப்பதுதான் என விளையாட்டாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மெஸ்சியைப் போல யமாலையும் கையாள்வது எதிரணிக்கு மிகவும் கடினமானது என்று பாராட்டிய ஸ்கலோனி, அவர் ஸ்பெயின் நாட்டிற்கு எதிர்காலத்தில் பல மகிழ்ச்சிகளைத் தருவார் என்றாலும், அது இந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியாக இருக்கக் கூடாது எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button