பலதும் பத்தும்

சந்திரனில் மனிதர்களை தரையிறக்க நாசா முயற்சி !! போட்டிக்கு வந்த சீனா!

சந்திரனில் தளம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும், அதற்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாகனங்களையும் நாசா சமீபத்தில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது.

இந்தத் திட்டங்களில் ரோபோ தரையிறங்கி, ட்ரோன்கள் மற்றும் பிற வாகனங்கள் அடங்கியுள்ளன.

2029 இல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்குவதே நாசாவின் திட்டமாகும்.

மேலும், 2032-க்குள் சந்திரனின் தென் துருவத்தில் 20 பில்லியன் டொலர் செலவில் அணுசக்தி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் தளமொன்றை அமைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், இந்த அமெரிக்கத் திட்டம் யதார்த்தமற்றது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2030-ல் சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்குவதற்கான சீனாவின் திட்டமும் அமெரிக்காவிற்கு ஒரு சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button