உலகம்

பாவி புயல் எதிரொலி – சீனாவில் கொட்டித் தீர்க்கும் மழை, பல பகுதிகளில் வெள்ளம்

பாவி புயல் காரணமாக சீனாவின் பல மாகாணங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெபே மாகாணத்தின் ஒரு மாவட்டமான குவான்செங்கில் (Kuancheng), சாலைகளில் நீர்மட்டம் இரண்டு மீட்டருக்கும் மேல் உயர்ந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

குவான்செங்கில் சுமார் 240,000 மக்கள் வசிக்கின்றனர், மேலும் இது லுவான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் பலத்த பாதிப்பு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜிலின் (Jilin), லியோனிங் (Liaoning), ஹெபே (Hebei), ஷான்டாங் (Shandong), ஜியாங்சு (Jiangsu) மற்றும் அன்ஹுய் (Anhui) மாகாணங்கள் முழுவதும் பாவி புயலினால் கடும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button