நிகழ்வுகள்

அப்புவின் சால்வை நூல் வெளியீடு… சொக்கன்

தனது நகரத்து மக்களோடு கொணடாடி மகிழ்ந்து வெளியிட்ட ஏலையா க.முருகதாசன் அவர்கள் எழுதிய அப்புவின் சால்வை என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் வெளியீடு கடந்த 04.07.26 அன்று ஜேர்மனி ,ஓபகவுசன் நகரில் மனம் கொள்ளத்தக்க வகையில் இடம்பெற்றது.

இந்நூல் வெளியீட்டின் ஆரம்ப நிகழ்வான மங்கல விளக்கேற்றல்,அகவணக்கம் எனத் தொடர்ந்த இவ்விழாவில் நூலாசிரியரின் மகளும் இவ்விழாவின் நிர்வாகியுமான சுஜாதா முருகதாசன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆதரவில்,நூலாசிரியரின் குடும்பத்தினரால் வெளியீடு செய்து வைக்கப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு,எழுத்தாளரும் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவரும்,ஜேர்மனி தமிழ் அரங்கத்தின் பொறுப்பகாளருமான திரு.விமலசேகரன் சபேசன் அவர்கள் தலைமையுரையையும்,நூலை வெளியிட்டு வெளியீட்டுரையையும் நிகழ்த்தினார்.இவர் தனது தலைமையுரையிலும் வெளியீட்டுரையிலும்,நூலாசரியர் ஏலையா சஞ்சியின்: ஆசிரியராகவிருந்த காலத்தில் தான் அதில் ஆக்கங்கள் எழுதியதாகவும்,அப்பொழுது தனது ஆக்கங்களை நிராகரித்திருந்தால் கண்டும் காணாமல் விட்டிருந்தால் தான் எழுத்துலகில் பயணிக்க காலதாமதமாகியிருக்கலாம் எனத் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய ஐரோப்பியத் தமிழ் வானொலியின் இயக்குனரும்,அகரம்,அகரதீபம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.தருமலிங்கம் இரவீந்திரன் அவர்கள் தனது சஞ்சிகையில் நூலாசரியர் தொடர்ந்து எழுதிவருவதைக் குறிப்பிட்டு,தேடல்மிக்கவர் எனக் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராகவும்,பதிப்பாசிரியராகவும் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய தமிழ் ரைம் சஞ்சிகையின் ஆசிரியரும்,ஐரின் வலைத்தளத் தொலைக்காட்சியின் இயக்குனருமான திரு.செல்லத்துரை தவராஜா அவர்கள் தனது தமிழ் ரைம் சஞ்சிகையில் நூலாசிரியர் ; எழுதி வருவதையம் குறிப்பிட்டு,அப்புவின் சால்வை என்ற நூலை வடிவமைத்துக் கதைகளைத் தொகுத்து அச்சிட்டதுவரை எந்தத் தலையீட்டையும்,நிர்ப்பந்தத்தையும் ஏலையா க.முருகதாசன் அவர்கள் அவருக்குக் கொடுக்காததையம் தனக்கான சுதந்திரத்தையம் கொடுத்ததை மகிழ்ந்து விதந்துரைத்திருந்தார்.

இன்னொரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய மண் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.வயிரமுத்து சிவராஜா அவர்கள்,தனது சஞ்சிகையை ஏலையா சஞ்சிகையாளர்களே 1990 ஆண்டு தைப்பொங்கல் தினமான 14ஆம் திகதி ஆரம்பித்து வைத்ததை நினைவுகூர்ந்து நூலாசிரியரின் எழுத்துப் பற்றியும் சிலாகித்து மகிழ்ந்தார்.

அடுத்து உரையாற்றியவர் அப்புவின் சால்வை என்ற நூல் வெளியீட்டுக்கான ,முக்கிய நிகழ்ச்சியான ஆயு;வுரைசை; செய்தவரான,பல குறும்படங்கனை இயக்கித் தயாரித்தவரும்,நாளைய மாற்றம் திரைப்படத்தைத் தயாரித்தவரும்,நாளைய நாம் தொடர் நாடகத்தை இயக்கிக் கொண்டிருப்பவுமான திருமதி.சிபோ சிவகுமாரன் அவர்கள்,ஒவ்வொரு கதைகளிலுமுள்ள பன்முக அடையாளங்களை விளங்கப்படுத்திக் குறிப்பிட்டதுடன் ஜேர்மன மொழியிலும் அவர் உரையாற்றியிருந்தார்.

இதுவரை காலமும் தங்களுடைய கலை,இலக்கிய மேடைகளில் நூலாசிரியரை அழைத்து உரை நிகழ்த்த வைத்த எழுத்தாளர்கள் கலையாளர்களை இந்நூல் வெளியீட்டு மேடையில் உரை நிகழ்த்தவைத்து அனைவருக்கும் நன்றி மறப்பது. நன்றன்று என்பதற்கொப்ப மலர் கொடுத்துக் கௌரவித்திருநதார்கள்;.விழாவின் தலைவர்,பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,நூலாய்வு செய்தவர் என அனைவருக்கும் நூலாசிரியரின் மகள்,மருமகள்கள் பூங்கொத்துக் கொடுத்துக் கௌரவித்தனர்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் சலங்கை ஒலி நாட்டியக் கலாமன்றத்தின்: அதிபர் கலாநிதி திருமதி. சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள் நடனங்களைத் தந்து சிறப்பித்திருந்தனர்.

இவ்விழாவில் நூலாசிரியரின் மகளும் அவரின் மகளான அவரின் பேத்தியும் இணைந்து நடனமொன்றை தந்து பார்ப்போரை வியப்படைய வைத்தனர்.
அப்புவின் சால்வை என்ற இந்நூல் வெளியீட்டுக்கான இந்நூலின் அட்டைப்படத் திட்டத்தில் ஓவியர்களை அறிமுகப்படுத்தி திருத்தங்களை சலிப்பின்றி மேற்கொள்ள வைத்த நூலாசிரியரின் நண்பரான அவுஸ்திரேலயா வாழ் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பொறுப்பாளர் திரு.சதா பாஸ்கர் அவர்களுக்கும் அட்டைப்பட ஓவியத்தை முதல் வடிவமைத்த அவுஸ்திரேலியா வாழ் ஓவியர் திரு.கிறிஸ்ரி நல்லரெத்தினம் அவர்களுக்கும்,அதனைச் செம்மைப்படுத்தி நூலட்டைக்கான ஓவியமாக்கிய திரு.சாமுவேல் றோசான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

இந்நூல் வெளியீட்டு விழா தனது மனைவி பிள்ளைகள் மருமகள்கள்,மருமகன் பேரன்கள் பேத்திகள் தங்கையின் மகளான மருமகள்அவரின் கணவர்அவர்களின் மகன் நண்பர்கள் திரு.சுரேஷ் திரு.இராஜன் திரு.கிஷோர் என அனைவராலும் முன்னெடுக்கப்பட்டு அப்புவின் சால்வை நூ}; வெளியீட்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button