பலதும் பத்தும்

நடுவானில் திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடி ; சீட் பெல்டால் தப்பிய உயிர்

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், காற்றின் கடுமையான அழுத்தத்தால் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும் பயணித்தார்.

அப்போது இவர் அருகில் இருந்து ஜன்னல் மீது ஏதோ ஒன்று வேகமாக மோதி, ஜன்னல் உடைத்துள்ளது. பின்னர் காற்றழுத்தம் காரணமாக அவரை விமானத்திற்கு வெளியே தள்ளியுள்ளது.

ஆனால், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவரை காற்றால் வெளியே இழுத்துச் செல்ல முடியவில்லை. அவரது தோள்பட்டை மற்றும் தலை ஏறக்குறைய வெளியே சென்றுள்ளது. ஆனால், அருகில் இருந்து பயணிகள் அவரை உள்ளே இழுத்ததால் உயிர் பிழைத்துள்ளார்.

டயர் வெடிப்பது போன்ற சத்தமும் அலறல் சத்தமும் கேட்டு தாங்கள் விழித்துக்கொண்டதாகவும், அதன்பிறகு பாதிக்கப்பட்ட பயணியின் தலையும் தோள்களும் ஜன்னலுக்கு வெளியே இருப்பதை கண்டதாகவும் பயணிகள் கூறினர்.

‘ரயன்ஏர்’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பயணியின் ஜன்னல் கழன்று விழுந்ததால், அது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியது. பயணிகள் முனையத்திற்குத் திரும்பினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button