பலதும் பத்தும்

இலங்கையில் அதிகளவானோர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவிப்பு

இலங்கை மக்களில் 84 சதவீதம் பேர் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தேசிய கண் வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில், நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 17,000 கண் வில்லைகளை 12,000 நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளமை குறித்தும் சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிநாடுகளின் கோரிக்கைகளையும் கணக்கில் கொண்டு, 4,000 முதல் 5,000 வரையிலான கண் வில்லைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

தேசிய கண் வங்கி ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகச் செயல்படுகிறது. மேலும், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிற ஆசிய மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து கண் மாற்று உறுப்புகளுக்கு அதிக கோரிக்கை உள்ளமை தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button