இலங்கை

கவச வாகனங்களின் பாதுகாப்புடன் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்; உறவினர்கள் தொடர்ந்தும் முற்றுகை

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேற்று செவ்வாய்கிழமை காலை சென்ற நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதிபதி சீலனி பெரேரா கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சி.ஐ.டி.யினரும் சிறைச்சாலைக்கு வந்து புலன்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றும் சிறை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டனர்.

இராணுவ கவச வாகன பாதுகாப்புடன் சிறைச்சாலை பஸ்களில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பெண் சிறைக் கைதிகளும் மோதலுடன் சம்பந்தப்படாத சில கைதிகளும் நீர்கொழும்பு சிறைச்சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றும் பெருமளவிலான உறவினர்கள் சிறைச்சாலை நுழைவாயிலில் குழுமியிருந்து சிறையிலுள்ள தமது உறவினர்கள் தொடர்பாக அறிவதில் முனைப்புக்காட்டினர்.

அங்கு மரணமடைந்தவர்கள், காயமடைந்தவர்கள், இடமாற்றப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்ட்டுள்ளன. அந்த தகவலின்படி மரணமடைந்த சிறை அதிகாரிகள் -7, கைதிகள் -19, முதல்நாள் சம்பவதில் -2 மரணம்.

காயமடைந்தவர்கள் 85 பேர் , அதில் பொலிஸ் -3, விசேட அதிரடி படையினர்- 6, சிறைச்சாலை அதிகாரிகள் -17, சிறைக் கைதிகள் -59 , கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்கள் -7 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் தொடர்பாக ஒலிபெருக்கி மூலமாகவும் கூடியுள்ள மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்ற நீதிபதி அங்கு வைக்கப்பட்டுள்ள சடலங்களை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனை நடாத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அங்குள்ள சில சடலங்களை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதுடன் சில சடலங்கள் அடையாளம் காணப்பட்டவில்லை.

நேற்று முழு நாளும் வைத்திய சலையில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button