பலதும் பத்தும்
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” நிறுவனத்தின் புதிய முயற்சி – விண்வெளிக்கு செல்லும் ஆபரணங்கள்!

“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” (Skyroot Aerospace) நிறுவனம், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைக்கும் வகையில், தனது ‘விக்ரம்-1’ (Vikram-1) ஏவுகணையின் ‘Aagaman’ திட்டப்பயணத்தை மேற்கொள்ளத் தயாராகியுள்ளது.
இந்த விண்வெளிப் பயணம் ஜூலை 12 முதல் ஒகஸ்ட் 4 வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தப் பயணத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் கருவிகளுடன், வைரம் மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக கலைப்படைப்புகளும் முதன்முறையாக விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
இது இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத் திறனையும் உலக அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()