உலகம்
இந்து சமுத்திரப் பகுதியில் நடுவானில் மாயமான பாகிஸ்தான் சரக்கு விமானம்

ஷார்ஜாவில் இருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்குச் சொந்தமான போயிங் 737 ரக சரக்கு விமானம், இந்து சமுத்திரப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் தொடர்பிலிருந்து விலகி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விமானத்தில் ஐந்து பேர் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், விமானத்தைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விமானம் காணாமல் போனதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
![]()