பலதும் பத்தும்

முழங்கை கருமையால் கவலைப்படுபவரா நீங்க?

இன்றைய காலகட்டத்தில் முகம் மற்றும் கைகளைப் பளபளப்பாகப் பராமரிக்கும் பலரும், முழங்கை மற்றும் முழங்கால் பகுதிகளில் உள்ள கருமையைக் கவனிப்பதில்லை.

இதனால் ஆடைகள் அணியும்போது பலர் சங்கடமாக உணர்வதும் உண்டு. முழங்கை, காலில் உள்ள கருமையை நீக்க, விலையுயர்ந்த கெமிக்கல் கிரீம்களைத் தேடி பயன்படுத்துவதத் தவிர்த்து, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி பண்ணிவிடலாம்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் கலந்துகொள்ளவேண்டும்.

இந்த பேஸ்ட் பேக்கை முழங்கையின் கருமையான பகுதிகளில் தடவி, மென்மையாக 5 முதல் 10 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு, வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கழுவி விட்டால் அந்த கருமை கொஞ்சம் கொஞ்சமாக நீங்க தொடங்கும்.

எலுமிச்சை பழத்தில் இயற்கையாகவே உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தின் கருமையைப் போகும் ஒரு சிறந்த ‘ப்ளீச்சிங்’ காரணியாக செயல்படுகிறது.

பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள இறந்த செல்களை ஸ்க்ரப் செய்து வெளியேற்ற உதவுகிறது.

தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைத் தொடர்ந்து செய்து வந்தால், முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமை நிறம் மறைந்து கை, கால்கள் ஒரே சீரான நிறத்திற்கு மாறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button