உலகம்

வெளிநாட்டுப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – துணைப் பிரதமரின் பேரன் கைது

பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரின் பேரன் முகமது ரஸா தார், லாகூரில் இரு வெளிநாட்டு பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் நாட்டின் மதிப்பை காக்க இஷாக் தார் உடனடியாகத் தனது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாகிஸ்தானில் வலுத்துள்ளது.

வெனிசுலா மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட இரு வெளிநாட்டுப் பெண்களும் கடந்த ஜூன் 29 ஆம் திகதி லாகூரில் வைத்து கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.

முதற்கட்ட அறிக்கைகளின்படி, முக்கிய குற்றவாளியான ரஸா தார் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்த போது இந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

இவர்கள் மூவரும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இந்தத் தொழில் நிமித்தமாக அவர்கள் பாகிஸ்தான் வருவதற்கு ரஸா தார் பிசினஸ் விசா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

ஜூன் 29 ஆம் திகதி ரஸா தாரின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் வந்த அப்பெண்கள், கடத்தப்பட்டு ராசா தார் மற்றும் அவரின் கூட்டாளிகளால் லாகூரில் கூட்டுப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நெதர்லாந்து பெண்ணின் தந்தை அளித்த அவசர புகாரின் அடிப்படையில், பாகிஸ்தான் பொலிஸார் ரஸா தார் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

லாகூர் நீதிமன்றம் கடந்த 03 ஆம் திகதி ரஸா தார் உள்ளிட்ட நாள்வரை 5 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடக்கும் மிக முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் சார்பில் பங்கேற்கும் உயர்மட்டத் தலைவர்களில் இஷாக் தாரும் ஒருவர் ஆவார்.

மறைந்த ஈரானிய முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரான் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் இராணுவ தளபதி அசிம் முனீர் உடன் இஷாக் தாரும் உடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button