நாமலின் அரசியல் பயணத்தை முடக்க சதியா?

“நாமல் ராஜபக்ச என்பவர் மஹிந்தவின் மகன், எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரின் அரசியல் பயணத்தை ஒடுக்கிவிடமுடியாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானக கூறியவை வருமாறு ,
“ அடக்குமுறைக்காகவே தமது கட்சி உறுப்பினர்களான இருவரை சிஐடி மற்றும் பொலிசுக்கு ஜனாதிபதி நியமித்தார். ஏனெனில் நாமல் ராஜபக்சதான் தமக்குரிய சவால் என்பது அவர்களுக்கு தெரியும்.
எனவே, நாமலுக்கான ஆதரவை தடுக்க முற்படுகின்றனர்.அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். நாமல் ராஜபக்ச என்பவர், மஹிந்த ராஜபக்சவின் மகன்.
எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரை அடிபணிய வைக்க முடியாது. நாம் நீதிமன்றத்தை நம்புகின்றோம். ஆனால் நீதிமன்றத்துக்கு தகவல்களை அறிக்கையிடும் தேசிய மக்கள் சக்தி பொலிஸார்மீது நம்பிக்கை இல்லை.” – என்றார் டிவி சானக.
![]()