இலங்கை

ராஜபக்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட்ட சந்திரிகா..!

06 முதல் 2014 வரையான காலத்தில், ராஜபக்ச குடும்பத்தினர் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்துள்ளதாக சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு கடன்களை அதிக வட்டி விகிதத்தில் (6% – 9%) பெற்று, அதில் கமிஷன் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் மற்றும் பல்வேறு சாலை அபிவிருத்தித் திட்டங்களில் திட்ட மதிப்பை விட பல மடங்கு அதிக செலவீனம் காட்டப்பட்டு ஊழல் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவர்களின் கீழ் சென்ற பின், பெரும் நட்டத்தைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அரச கொள்முதல்களில் கடுமையான டெண்டர் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு எழும் அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் பதவியிலிருந்து விலக வேண்டும். காவல்துறை மற்றும் நீதித்துறை அரசியல் தலையீடு இன்றி சுயாதீனமாகச் செயல்பட வேண்டும்.

நாட்டின் நிர்வாக அமைப்பில் முறையான மாற்றங்களை (System Change) கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button