பலதும் பத்தும்

இங்கிலாந்தின் முதல் ஏஐ வழக்குறைஞர் – சாதகமாக வந்த தீர்ப்பு

இங்கிலாந்தில் முதல் முறையாக நீதிமன்ற நடவடிக்கையில் வழக்குறைஞராக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுயதொழில் செய்யும் மனிதவள ஆலோசகரான டாமிரெஸ் கமால் டகுய்டிர், செலுத்தப்படாத £7,000 கடனுக்காக ஒரு சட்டப்பூர்வ கடிதத்தை அனுப்பவும், பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்கவும், கார்ஃபீல்ட் ஏஐ (Garfield AI) என்ற நிறுவனத்தை நாடினார்.

வழக்குச் செலவுகள், வெல்லக்கூடிய பணத்தை விட அதிகமாக இருப்பதால், நீதிமன்றத்தில் வாடிக்கையாளருக்காக வாதிட Garfield நிறுவனம் ஒரு மனித வழக்கறிஞரை நியமித்தது.

விசாரணைக்கு முந்தைய அனைத்து சட்டப் பணிகளையும் AI மேற்கொண்டது. இதில், வழக்கறிஞர்களை நியமித்து பிரதிவாதி தாக்கல் செய்த எதிர் வழக்கை எதிர்த்து வாதிடுவதும் அடங்கும்.

அதன் பிறகு ஒரு மனித வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கை முன்வைத்து வாதாடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் (Wandsworth) கவுண்டி நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“வழக்குத் தொடரத் தகுதியற்றதாக இருந்திருக்கக்கூடிய உரிமையியல் வழக்குகளில் நீதி கிடைப்பதற்கு இது உதவும் என வழக்கறிஞரான டொமினிக் லி குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button