ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு ; ஈரான் புதிய நிலைப்பாடு

பக்தாத் பயணத்தின் போது கருத்து தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான ஈரானின் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
அமெரிக்காவுடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னதாக நடைபெறும் அடுத்த 60 நாட்கள் பேச்சுவார்த்தைக் காலப்பகுதியில், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் ஈரானின் ஒருங்கிணைப்பு மற்றும் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முடியாது என ஈரானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றான புதிய கடல் வழிப்பாதையை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், 60 நாட்கள் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர், ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை ஓமானுடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பில் ஈரான் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிர்வாக ஏற்பாடு நீண்டகால அல்லது நிரந்தரமான ஒன்றாக அமையக்கூடும் எனவும் கூறப்படுகிறது. தற்போதைய உடன்பாட்டின்படி, பேச்சுவார்த்தை காலப்பகுதியில் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான முழுமையான பொறுப்பும், அதன் நிர்வாகக் கட்டுப்பாடும் ஈரானுக்கே உரியது என ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
![]()