உலகம்

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் களஞ்சியங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்க விமானப் படையினரால் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) களஞ்சியங்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஹோமுஸ் நீரிணையில் வைத்து கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரானின் கடலோர ரேடார் மையம் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், போர்நிறுத்த உடன்படிக்கையை ஈரான் மீண்டும் ஒருமுறை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது போல் தோன்றுவதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுடன் நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

நிலைமை அவ்வாறு தொடருமேயானால், இதற்கு முன்னர் தம்மால் மிகவும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர நேரிடும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதுமட்டுமன்றி, அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு இந்த உலகை விட்டே நிரந்தரமாக அழிந்துபோகும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button