உலகம்
வெனிசுலா இடிபாடுகளுக்கு அடியில் 18 நாள் சிசு உயிருடன் மீட்பு ; துயரத்திலும் நெகிழ்ச்சி

வடக்கு வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பரவலான அழிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு நெகிழ்ச்சியான மீட்பு நடவடிக்கை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு, அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தந்தையோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அக்குழந்தையை மீண்டும் சந்தித்தார். சுமார் 90 நிமிடங்களுக்குப் பிறகு, அக்குழந்தையின் தாயும் உயிருடன் மீட்கப்பட்டார்.
இக்குடும்பத்தினர் உயிர் பிழைத்தது, இந்தத் துயரச் சம்பவத்தில் வெளிப்பட்ட மிகவும் நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.
இந் நிலையில் குழதையின் தந்தை கண்ணீருடன் குழந்தையை முத்தமிடும் நெகிழ்ச்சியான சந்திப்பு மீட்புக் குழுவினரையும் இணையவாசிகளையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
![]()