உலகம்
அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்; மத்திய கிழக்கில் பதற்றம்!

ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை வளைகுனாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இலக்குகள் மீது தகுந்த பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட தற்காலிக அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைமீறி, அமெரிக்கா இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()