இலங்கை

அமெரிக்காவில் இருந்து விரைவில் அழைத்துவரப்படவுள்ள பசில்: அதிரடி காட்டும் அமைச்சர்

அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்சவை விரைவில் கொண்டு வந்து சட்டத்தை நிலைநாட்டுவோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி  நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை வழக்கு விசாரணைகளுக்கு பசில் கட்டாயம் முன்னிலையாக வேண்டும் என்று கூறப்படும் சூழலில் பசிலுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button