இலங்கை

சுரேஷ் சலேவின் தாயார் பாப்பரசருக்கு கடிதம்

முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவைச் சுற்றியுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவரது தாயார் பாப்பரசர் லியோவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம், இலங்கையில் திருத்தந்தையின் பிரதிநிதியான திருத் தூதரிடம்  ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவின் மனைவியும் உடனிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு காவலில் இருந்தநிலையில் உணவு உட்கொள்ள மறுத்த நிலையில் உடல்நிலை மோசமடைவதாக தெரிவித்து ​​முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இன்னும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button