உலகம்

போரை முடிவுக்கு கொண்டு வர இது தான் முக்கியம்; ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த நிபந்தனை

அமெரிக்கா மீதான ஈரானின் ‘மரியாதை’ மட்டுமே இரு நாடுகளுக்கு இடை யேயான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் களிடம் பேசிய ட்ரம்ப், அச்சுறுத்தலை விட இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக ரீதியிலான மரியாதையே அமைதிக்கு முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர், “ஈரான் எங்களை மதிக்கும் வரை எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் ‘பயம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை, அது தவறான வார்த்தை. ஆனால் அவர்கள் அமெரிக்காவை மதிக்க வேண்டும்” என்றார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே முழு மையான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், மூடப்பட்டுள்ள ஹார்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை முற்றிலும் திறக்கப்படும் என்றும், அது உலக ளாவிய கச்சா எண்ணெய் விலையை நிலைநிறுத்த உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button