இலங்கை
ஈஸ்டர் தாக்குதலினால் பயனடைந்தவர் கர்தினால் மல்கம் ரஞ்சித்..!; கம்மன்பிலவின் பரபரப்பு குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலை மையமாக வைத்து, தனது பதவிக்காலத்தை நீட்டித்துக் கொள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித் முயன்றதாக உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அருட்தந்தை சிரில் காமினியிடம் கம்மன்பில 10 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இதில் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள், சுரேஷ் சலே தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு குறித்த விவாதங்கள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலால் அரசியல் ரீதியாக கோட்டாபய ராஜபக்ச பயன் பெற்றார் என்பதை கம்மன்பில மறுத்துள்ளார்.
மேலும் தன்னிடம் 30 கேள்விகள் உள்ளதாகவும், இந்த கேள்விகளுக்கு அருட்தந்தை சிரில் காமினி பதில் கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
![]()