பலதும் பத்தும்

ஈரானில் ஹிஜாப் அணியாமல் பாடிய பெண்ணுக்கு 74 கசையடிகள்

ஈரானில் மத கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைப்பிடித்து வரும் நிலையில் ஹிஜாப் அணியாமல் பாடியதால் பெண்ணுக்கு 74 கசையடிகள் வழங்க்க அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த 29 வயது கலைஞர் பரஸ்தூ அஹ்மதி, தனது யூடியூப் பக்கத்தில் ஹிஜாப் அணியாமல் தேசப்பற்று பாடலை பாடி வீடியோ வெளியிட்டார்.

இதற்காக அவருக்கு 74 கசையடிகளும், 2 ஆண்டுகள் வெளிநாடு செல்லவும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்து அந்நாட்டின் கும் மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தற்பொழுது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button