இலங்கை

சுரேஷ் சலே – கோட்டாவின் இரகசிய முகாமில் சிக்கிய தமிழ் பெண்ணின் வாக்குமூலம்

உடுவில் பகுதியிலுள்ள இராணுவ முகாமில் நடந்த வதை, இரண்டு மலசலகூடங்களில் நடந்த வதை அதுமட்டுமல்லாது பெண்களின் உடைகளைக் களைந்து இடம்பெற்ற ஒரு அவலமான செயற்பாடு குறித்து தமிழ் பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்தோடு, குறித்த வதைச் சம்பவங்களை ஒரு சிஐடி அதிகாரி பொறுப்பாக நின்று செய்ததாகவும் அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சில நாட்களின் பின் உடுவில் பகுதியில் இராணுவத்தினர் ஒரு பெண்ணை வதை செய்து விட்டு வீதிகளிலே வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கையிலே தொப்பியும் துணியும் இருந்ததாகவும் அது தற்போது வரை வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், சுரேஷ் சலே , கோட்டா செய்த அநியாயங்களை அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.இவர்களால் தான் நாம் இந்த நிலைமைக்கு வந்தோம் எனவும் பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button