இலங்கை

மதங்களுக்குள் வன்முறையை தூண்டும் உதய கம்மன்பில!

சிங்களவர்களினுடைய மனநிலையை மாற்றி அதே இனத்தவர்களை பிரிக்கின்ற வேலைத்திட்டத்தை கத்தோலிக்க திருச்சபை ஆரம்பித்து இருப்பதாக உதய கம்மன்பில பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவிற்கு ஆதரவாக மல்வத்து பீடத்தில் இருந்து முக்கியமான தேரர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதமும் அனுப்பி வைத்துள்ளார்.

மல்வத்து பீடத்தில் இருக்கின்ற தேரர்கள் எல்லாம் இந்த விடயத்தில் தலையீடு செய்வ வேண்டிய அவசியமே இல்லை.ஆனால் இதனை மதவாத ரீதியாக கொண்டு செல்கின்றமை தெளிவாகத் தெரிகின்றது.

இதற்கெல்லாம் பிரதான காரணம் உதய கம்மன்பில போன்ற சில அரசியல்வாதிகள் தான்.அத்தோடு, குறித்த தரப்பினர் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்திக் கொண்டு, மதங்களுக்கு இடையில் பிரச்சினையைத் துண்ட என்னவெல்லாம் செய்ய வேண்டும் அதனை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button