இலங்கை

சுரேஷ் சலேவிற்கு பின்னர் மகிந்தவின் மகன்களுக்கு ஆபத்தாகும் ஜூலை மாதம்..!

இலங்கை அரசியலில் ஜூலை மாதம் மிக முக்கியமான மாதமாக இருக்குமென்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தென்னிலங்கைக்குள் மிகப்பெரிய மோதல் ஆரம்பமாக போகின்றது.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் வழக்கானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை அரசியலிலிருந்து இல்லாது செய்வதற்கான முக்கிய வழக்காக பார்க்கப்படுகின்றது.

ஆனால் அதன் விசாரணைகளுக்கு இந்தியா பெரும் தடையாக உள்ளது, இதனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்தியா தற்பொழுது பலவீனமானதாக உள்ளதால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளார்.

அத்தோடு மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு எதிராக ஒரு நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்சவின் வழக்கும் ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாமல் ராஜபக்சவின் கிரிஷ்வழக்கும் ஜூலை மாதம் விசாரிக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button