சுரேஷ் சலே நடத்தப்படும் விதம் குறித்து ஐ.தே.க கண்டனம்

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே நடத்தப்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தங்களது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சுரேஷ் சாலே நடத்தப்படும் விதம் குறித்து நேரில் ஆராய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அனுப்பி வைப்பது பொருத்தமானதாக இருக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சுரேஷ் சாலேவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் இதே போன்ற வழிமுறைகள் எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம் என எச்சரித்துள்ளது.
இது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவிற்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முற்றிலும் இணங்க அமைவதை உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
![]()