லண்டனில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ; 36வது மாடியில் இருந்து மகனுடன் குதித்து இந்திய தம்பதி தற்கொலை

லண்டனில் 45 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து 9 வயது மகனுடன் தம்பதியினர் கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் அமைந்துள்ள ஹைபாயிண்ட் குடியிருப்பின் 36வது மாடியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் பாய் (47), அவரது மனைவி அதிதி பரல்கர் (46) மற்றும் அவர்களது 9 வயது மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தம்பதியினரின் மகன் நீண்டகாலமாக கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு சிகிச்சை பெறும் நோக்கில் குடும்பத்தினர் 2020ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றிருந்ததுடன், பின்னர் மீண்டும் லண்டனுக்கு திரும்பியிருந்தனர்.
எனினும், சிறுவனின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், மேலதிக சிகிச்சை வாய்ப்புகள் குறித்தும் மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மூவரின் சடலங்களையும் மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
![]()