‘சேஃப்டி பின்’னில் இருக்கும் துளை – எதற்காக தெரியுமா?

அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்றுதான் சேஃப்டி பின்.
அந்த சேஃப்டி பின்னில் ஒரு துவாரம் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அது எதற்காக இருக்கிறது என்று சிந்தித்திருக்க மாட்டோம்.
ஒரு சிலர் இந்த துளையானது, நூலைக் கோர்ப்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் தேவைக்காகவோ இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், உண்மை அதுவல்ல. சேஃப்டி பின்னில் காணப்படும் துளையானது, உண்மையில் தேவைக்காக வைக்கப்பட்ட துளை இல்லை. அது முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட கம்பிச் சுருள்.
இந்த சிறிய கருவியை கண்டுபிடித்தவர் வால்டர் ஹன்ட் என்பவர்.
இந்த சேஃப்டி பின்னின் கம்பிச் சுருளை டார்ஷன் ஸ்ப்ரிங் என அழைக்கின்றார்கள்.
இந்தக் கம்பிச் சுருள்தான் அந்த ஊசிக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதாவது, ஊசியைத் திறந்து மூடும்போது அது பழைய நிலைக்குத் திரும்புவதற்கு காரணமாகிறது.
சேஃப்டி பின்னின் நீண்ட நாள் உழைப்புக்குக் காரணம் அந்த கம்பிச் சுருள்தான்.
![]()