பேய் இருக்கா? இல்லையா?

பேய்கள் தொடர்பிலான நம்பிக்கைகள், கட்டுக்கதைகள் ஆகியன காலம் காலமாக தொடர்ந்தவண்ணம்தான் உள்ளன.
அந்த வகையில் இவ் உலகில் பேய்கள் உண்மையில் இருக்கின்றனவா? அதனை நம்பலாமா? என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் இல்லை.
அதன்படி, பேய்கள் தொடர்பிலான சில சுவாரஷ்ய விடயங்கள் குறித்து பார்ப்போம்.
இருளான இடத்திலோ மரத்திலோ ஒருவரின் முகம் தெரிவது போலத் தோன்றும் உணர்வை பரைடோலியா என்பர். இது மூளையின் ஒரு தந்திரம் தானே தவிர, உண்மையில் அது பேய் இல்லை.
அதிகாலை 3.00 மணி தொடக்கம் 4.00 மணி வரையில் பேய்களின் நேரம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இந்த குறிப்பிட்ட நேரத்தில் அமானுஷ்ய சக்திகள் மிகவும் வலிமையாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
வீட்டில் ஒரு பகுதியில் மட்டும் திடீரென குளிர்ச்சியாக உணரப்பட்டால் அந்த இடத்தில் ஓர் ஆவி இருப்பதாக பேய் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மனிதர்களை விடவும் பார்வைத் திறன், கேட்கும் திறன் அதிகம். எனவே, மனிர்கள் உணராத அமானுஷ்யங்களை அவற்றால் உணர முடியும் என கூறப்படுகிறது.
திடீரென உறக்கத்தில் விழித்தால் கை, கால்களை அசைக்க முடியாமல் போவது ஒரு நரம்பியல் பிரச்சினை. இதைத்தான் பலர் பேய் அமுக்குகிறது என கூறுகின்றனர்.
பழைய வீடுகளில் கார்பன் மோனாக்சைட் வாயு கசிந்தால் அது மூளையில் பிரம்மையை உண்டாக்கும். இதனால் இல்லாத உருவங்கள் தெரிவதும், குரல்கள் கேட்பதும் போல் இருக்கும்.
உப்பைத் தாண்டி தீய சக்திகள் வராது என்ற நம்பிக்கை உள்ளது.
வெற்று அறையில் ரெக்கார்டர் மூலம் பதிவு செய்யும்போது கேட்கும் விபரிக்க முடியாத குரல்களை ஆவிகளின் குரல் என்று நம்புகிறார்கள்.
அந்தக் காலங்களில் கண்ணாடிகள் ஆன்மாவைப் பிடித்து வைத்துக்கொள்ளும் என்று நம்பப்பட்டது. அதனால்தான் வீட்டில் யாராவது இறந்தால் அங்கிருக்கும் கண்ணாடிகளைத் துணியால் மூடுகிறார்கள்.
![]()