பலதும் பத்தும்

சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கொண்ட ‘செங்கால் குரங்குகள்’

உலகில் எத்தனையோ வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.

அதன்படி, குரங்குகளில் பஞ்சவர்ண குரங்குகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

செங்கால் குரங்குகள் அவற்றின் உடலில் உள்ள பல வித நிறங்களுக்காகவே பஞ்சவர்ண குரங்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

இக் குரங்குகளின் முகம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு, கண்களைச் சுற்றி வித்தியாசமான அமைப்பும் காணப்படும்.

வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளின் அடர் காடுகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.

இவ் வகை குரங்குகள் பொதுவாக குழுவாகவே திரியும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைமை ஆண் இருக்கும்.

இலைகள், பூ, பழங்கள், மொட்டுக்கள் ஆகியன இவற்றின் உணவாகும்.

உடலை விட பெரிதாக இருக்கும் இதன் வாலானது, மரங்களுக்கு இடையில் தாவும்போது சமநிலையைப் பேண உதவும்.

இவ் வகை குரங்குகளுக்க உணவைத் தேடும் திறனும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனும் அதிகம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button