இலங்கை

தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதியில் பெரும் முறைகேடு: உறுப்பினர்கள் கொதிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதியின் முறைகேடான நிர்வாகத் தெரிவு தொடர்பாக வட்டுக்கோட்டைத் தொகுதியின் மூத்த கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட மூலக்கிளை உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர் மற்றும் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

இதன் பிரதிகள், மத்திய செயற்குழுவின் சகல உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்சியின் தலைவருக்கும் மத்திய செயற்குழுவில் இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தக் கோரியும் பிரதியிடப்பட்டுள்ளன.

இது குறித்து தெரிய வருகையில் யாப்புக்கு முரணான வகையில் தொகுதி நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இது உரிய வகையில் முறைப்படி செயல்படுத்தவில்லை மூலக்கிளையின் நிர்வாகிகளுக்கு உரிய அழைப்பு விடுக்கவில்லை.

தமக்கு விரும்பிய உறுப்பினர்களுக்குத் தொலைபேசி மூலம் அழைத்து கட்சியின் பதில் தலைமைகளால் கூட்டம் நடைபெற்று முறைகேடான முறையில் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதனை ஆட்சேபித்துக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு உரிய விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளனர்.

கூட்டம் முறைகேடான முறையில் இடம்பெற்றது என்பதற்கான உரிய ஆதாரங்கள் ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில் முறைகேடுகள் நடைபெற்றது, பிழையான வகையில் தெரிவு இடம்பெற்றது என்பதற்கு ஆதாரமான சான்றிதழ் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button