மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் AI! வெளியான எச்சரிக்கை

சக்திவாய்ந்த AI அமைப்புகளை உருவாக்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என Anthropic AI நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்த்ரோபிக் ஏஐ
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இது எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த சூழலில் செயற்கை நுண்ணறிவு முன்னோடி ஆய்வகமான ஆந்த்ரோபிக் ஏஐ (Anthropic AI), தனது சமீபத்திய வலைப்பதிவில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இது தொடர் சுய-மேம்பாடு என்று அழைக்கப்படுகிறது. நாம் இன்னும் அந்த நிலையை அடையவில்லை; மேலும் தொடர் சுய-மேம்பாடு என்பது தவிர்க்க முடியாததும் அல்ல. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் தயாராக இருப்பதை விட அது விரைவில் வரக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
மீள்சுழற்சி சுய முன்னேற்றம் என்பது, ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு, தனக்கு அடுத்த பதிப்பை முழுமையாக தன்னிச்சையாக வடிவமைத்து உருவாக்கும் திறன் கொண்டதாகும்.
விரைவில் நடக்கக்கூடும்
இந்நிகழ்வு எதிர்பார்த்ததை விட மிக விரைவில் நடக்கக்கூடும் என்று தங்கள் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
“செயற்கை நுண்ணறிவு தன்னைத்தானே உருவாக்கும்போது: தொடர் சுய-மேம்பாட்டை நோக்கிய நமது முன்னேற்றமும் அதன் தாக்கங்களும்” என்ற தலைப்பில் அந்நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
![]()