ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? இந்த ஒரு விதை போதுமாம்

தினமும் சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடம்பில் நடைபெறும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உணவுமுறை என்பது பலருக்கும் வித்தியாசமாக மாறியுள்ளது. அதாவது எண்ணெய்யில் பொரித்த உணவுகள், ஜங்க் புட், ஃபாஸ்ட் புட் உணவுகள் இவற்றினை தான் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால் இவை ரத்த நாளங்களில் கொழுப்பை படிய வைத்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தினை தடைசெய்கின்றது.
இறுதியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரே போகும் நிலையும் ஏற்படுகின்றது. அந்த வகையில் ரத்த நாளங்களில் படியும் கொழுப்பினை குறைக்கும் சியா விதையினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சியா விதைகள்
பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் சியா விதையில் சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது. முக்கியமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, கால்சியம், புரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாகவே இருக்கின்றது.
இவை ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பினை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
சியா விதையினை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது சிறந்ததாகும். ஒரு ஸ்பூன் சியா விதையினை ஒரு டம்ளர் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். அவ்வாறு இல்லையெனில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீரோடு விதையையும் சேர்த்து குடிக்கவும்.
இவை மெட்டாபாலிசத்தை அதிகப்படுத்துவதுடன், ரத்த குழாயையும் சுத்தம் செய்கின்றது. தண்ணீரில் கலந்து குடிப்பதற்கு பிடிக்கவில்லை எனில் அன்றாட உணவில் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

உணவில் எவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம்?
அதாவது நாம் பருகும் பழச்சாறு அல்லது ஸ்மூத்தியில் ஊற வைத்த சியா விதையினை சேர்த்து குடிக்கலாம். இவை வயிறு நிறைந்த உணர்வை அளிக்கின்றது.
காய்கறி மற்றும் பழ சாலட் இவற்றின் மேலே விதைகளை தூவி சாப்பிடலாம்.
காலை நேரத்தில் ஓட்ஸ் அல்லது ராகி கஞ்சியுடன் கலந்து குடிப்பதால் சத்துக்கள் இரட்டிப்பாக கிடைக்குமாம்.

பாலுடன் சியா விதை, கொஞ்சம் தேன் கலந்து புட்டிங் போன்று செய்து சாப்பிட்டாலும் நல்ல பலனை பெற முடியும்.

![]()