இலங்கை

வடக்குக்கு அதிகாரங்களை வழங்குவது தேசத் துரோகம்! அநுரவுக்கு அறிவுரை

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தேர்தலை நடத்தி வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால்தான் பிரச்சினை ஏற்படும்.

நாடு பெடரல் ராஜ்யமாகும்.

இலங்கையில் இதுவரை ஆட்சி புரிந்த எந்தவொரு ஜனாதிபதியும் இந்த வேலையைச் (பொலிஸ், காணி அதிகாரம் பகிர்வு) செய்யவில்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதே அணுகுமுறையை பின்பற்றுவார் என நம்புகின்றோம். சிலவேளை பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால் இந்த நாடு பெடரல் ராஜ்யமாகும்.

அவ்வாறு நடந்தால் இதுவரைகாலமும் பாதுகாத்து வந்த ஒற்றையாட்சி முறைமை இல்லாமல்போகும்.

இது தேசத்துரோக நடவடிக்கையாகவே அமையும். இவ்வாறானதொரு செயலை ஜனாதிபதி செய்வார் என நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button