முச்சந்தி

இரு சிறுவர்களது உட்பட 6 எலும்புக் கூடுகள் சிக்கின; இதுவரை 302 எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சிறுவர்களுடையது உட்பட 6 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 8 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 18ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி கைலாயநாதன் சுபாகர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், ருகுணு பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.

இதுவரை மொத்தமாக 302 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 298 மனித என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வில் சான்றுப் பொருட்கள் எதுவும் அடையாளம் காணப்பட்டவில்லை.

இதேவேளை அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button