உலகம்

பாகிஸ்தானில் இரு தரப்பு மோதல்; 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் பகுதியின் குல் கச் பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையிலான நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூட்டாக மாறியுள்ளது.

நீண்ட காலமாக நிலவி வந்த இந்த தகராறு சமீப காலத்தில் தீவிரமடைந்த நிலையில், நேற்று இரு தரப்பினரிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தின் டொலிடோ நகரில் நடைபெற்ற ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற “ஓல்ட் வெஸ்ட் எண்டு” திருவிழாவின் போது திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிலும் இடம்பெற்ற இந்தத் தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button