வடகொரிய ஜனாதிபதியின் உத்தரவால் பரபரப்பு

ஏவுகணை உற்பத்தியை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு வடகொரியாவின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளமை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் தொழிலாளர் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான ‘ரோடாங் சின்முன்’ வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது : ஜளாதிபதி கிம் ஜாங் உன் ஒரு முக்கிய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு
அப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணை உற்பத்தித் திறனை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு நாட்டின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
ஏவுகணை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி கிம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி கிம் ஜாங் உன் பேசுகையில், ‘ஏவுகணைகளுக்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள 9வது மத்தியக் குழு கூட்டத்தில் உற்பத்தி விரிவாக்கம் தொடர்பான முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும்,’ என்றார்.
![]()