இலங்கை

சுதந்திரமாகப் பாடுவதற்கு அநுர ஆட்சியிலும் தடையா?;  சிறீதரன் எம்.பி. கடும் விசனம்

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,தற்போது கத்தோலிக்க மதகுருமார்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும் அருட்தந்தை ஜீவந்த பிரீஸ் மே 18அன்று நினைவேந்தல் நிகழ்வில் தமிழர்களுக்கு நடந்தது. இனப்படுகொலை என்பதை தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் சகோதர மொழி பேசக்கூடிய ஒருவர் இவ்வாறு சொல்கின்ற விடயம் முக்கியமானது. நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக மிகவும் துணிச்சலாக 146,000பேர் இறந்த மற்றும் காணாமல் போனமை தொடர்பாக மன்னார் ஆயர் இராஜப்பு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேசி வரும் கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களை பற்றி பேசவில்லை.

ஆட்சி மாறினாலும் முன்னைய மகிந்த, மைத்திரி ,சந்திரிக்கா,ரணில் ஆட்சியைப்போல் அனுர ஆட்சிலும் சுதந்திரமாகப் பாடமுடியவில்லை, பேச முடியவில்லை.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் பாடல் பாடியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு 16நாட்கள் சிறையில் கிளிநொச்சி இளைஞன் அடைக்கப்பட்டுள்ளார். ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button